04 December 2012

நான் மகான் அல்ல



மனிதன் எப்போது மகான் ஆகிறான்?

புலன்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ மனிதனைக் கைவிடுகின்றன.துய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது; கடைசியில் அற்றுப் போகிறது. துய்ப்புக்கான வாசல்கள் மூடப்படும் போது , ஞானத்திற்கான ஜன்னல்கள் திறக்கின்றன.

பணம் என்பது தன் மதிப்பிழந்து அரசாங்கம் அச்சடித்த மற்றுமொரு தாள் என்று தோன்றுகிறது. தங்கம் தன் பெருமையிழந்து மஞ்சள் உலோகமாக மாறிவிடுகிறது. பெண்ணின் மார்பகம் கவர்ச்சி கழிந்து பாற்சுரப்பிகளின் உபரிச் சதை என்றாகி விடுகிறது. 

புலன்கள் கைவிட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்தால் அவன் மனிதன். புலன்கள் துடிக்கும் பருவத்திலேயே இந்த ஞானம் அடைந்தால் அவன் மகான். 

-வைரமுத்து

No comments:

Post a Comment