18 May 2012

பறவைகளின் காவலாளி


முற்றத்தில் காயும்
தானியங்களைப் பார்த்துக்கொள்ளுமாறு
நிஷாக் குட்டியைக்
காவலுக்கு வைத்துவிட்டு
அம்மா கடைக்குச் சென்றாள்
பொறுக்க வரும் காக்கைகளை
விரட்டாமல்
'சீக்கிரம்...சீக்கிரம்...
அம்மா வர்றதுக்குள்ளே
தின்னுக்கோ'
எனச் சொல்லும் நிஷாக் குட்டியின்
அன்பின் பெருவெளியைச்
சமன்படுத்த
வார்த்தை எதுவும் சிக்கவில்லை எனக்கு.

-.சிவநேசன்

1 comment:

  1. அருமையான கவிதையை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete