27 April 2009

பகுத்தறிவு



ஏன் தத்துவவாதிகள் கடவுளை நம்புவதில்லை?

தத்துவத்துக்கு கடவுள் தேவையில்லை. விஞ்ஞானம் முடிவடையும் புள்ளியில் தத்துவம் துவங்குகிறது.

ஒரு முறை கடவுள் ஒரு தத்துவ அறிஞரின் எதிரே வந்து நின்றார்.
" நான் தான் கடவுள். நல்லது ,கேட்டது எல்லாவற்றிற்கும் அடிப்படையானவன் ".

" அப்படியா...சரி..எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்வதால் ஒரு விஷயம் நல்லது ஆகிறதா? அல்லது , அது நல்லது என்பதால் நீங்கள் அப்படி சொல்கிறீர்களா?"

"நான்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்றேனே! நான் சொல்வதால் தான் ஒன்று நல்லதாகிறது!"

"அப்படியென்றால் ஒரு குழந்தையைச் சித்ரவதை செய்வது என்பது ' நல்லதுதான்' என்று நீங்கள் சொல்வதால் நல்லதாகிவிட முடியுமா?"

கடவுளுக்கு கோபம் வந்தது. தத்துவவாதி தொடர்ந்தார்.

"அது நல்லது இல்லை. ஆகவே தான் நீங்களும் அது நல்லது இல்லை என்கிறீர்கள்! இது எனக்கே தெரியுமே. நீங்கள் எதற்கு?"

கடவுள் மறைந்து விடுகிறார்.

- மதன் கேள்வி- பதில்

4 comments:

  1. வணக்கம். நான் கே.பாலமுருகன். மலேசியா. ஓஷோ பற்றியும் ஆன்மீகங்கள் பற்றியும் பேச ஒரு நண்பர் கிடைப்பாரா என்று காத்திருந்தேன். உங்களின் வலைப்பதிவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    கடவுள் ஒரு அப்பாவிங்க. அவருக்கு நல்லது கெட்டது தெரியாது. மதவாதிகள்தான் அவரை முன் வைத்து நல்லது கெட்டது என்கிற வாழ்வரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  2. கடவுள் சொல்வதை யாருங் கேட்பதில்லை.
    ஆனால் மதவாதிகள் சொல்வதைக் கடவுள் அப்படியே
    கேட்டு நடக்கிறார்.

    ReplyDelete
  3. எல்லாமே புரோக்கர்கள் பண்ணுற குழறு படி.

    ReplyDelete
  4. \\"அப்படியென்றால் ஒரு குழந்தையைச் சித்ரவதை செய்வது என்பது ' நல்லதுதான்' என்று நீங்கள் சொல்வதால் நல்லதாகிவிட முடியுமா?"
    கடவுளுக்கு கோபம் வந்தது\\

    ஒரு உயிருக்கு துன்பம் விளைவிக்க சொல்லி கடவுள் எங்கு, எப்போது சொல்லி இருக்கிறார்?. வெறும் (மதன் போன்ற) தத்துவவாதிகளிடம் (ஒருவேளை) சிக்கினால் அதோகதிதான்...

    ReplyDelete